உங்களுடன் ஸ்டாலின் முகாம் 23ம் தேதிக்கு மாற்றம்
வாலாஜாபாத்:வாலாஜாபாதில் கடந்த 9ம் தேதி நடைபெற வேண்டிய, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 23ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காணும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் கடந்த மாதம் 15ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சியில் கடந்த 9ம் தேதி நடக்க இருந்த முகாம் நிர்வாக காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது. அம்முகாம் வரும் 23ம் தேதி, வாலாஜாபாத் ஆதம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் காலை 9:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை மனுக்கள் அளிக்கலாம் என, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.