உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவ - மாணவியரின் சைக்கிள் போட்டி

மாணவ - மாணவியரின் சைக்கிள் போட்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில், வையாவூரில் மாணவ - -மாணவியருக்கான, அண்ணா நினைவு சைக்கிள் போட்டியை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை ஒட்டி, சைக்கிள் போட்டிகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள வையாவூரில், கலெக்டர் கலைச்செல்வி போட்டியை துவக்கி வைத்தார்.வையாவூர் அரசு பள்ளியில் துவங்கி, ஒழவூர் பேருந்து நிறுத்தத்தை அடுத்து கரூர் வரை சென்று முடிவடைந்தது. இப்போட்டியில் ஆண் - பெண் இருபாலருக்கும் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசு தொகை, 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசு தொகையாக 3,000, மூன்றாம் பரிசு தொகையாக 2,000 ரூபாய், 4 முதல் 10வது இடம் வரை தலா 250 ரூபாய் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், மேயர் மகாலட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை