உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவ - மாணவியர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவ - மாணவியர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்:இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்கள், செப்.,30க்குள், http://scholarships.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ