உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி நேரத்திற்கு முன் இயங்கும் அரசு பேருந்தால் மாணவர்கள் அவதி

பள்ளி நேரத்திற்கு முன் இயங்கும் அரசு பேருந்தால் மாணவர்கள் அவதி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் வழியாக அரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்து மாலையில் பள்ளி நேரத்திற்கு முன்பாக இயக்குவதால் போக்குவரத்திற்கு மாணவ - மாணவியர் பலரும் அவதிபடுகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் மற்றும் அரும்புலியூர் வழியாக செங்கல்பட்டு வரை தடம் எண்580 என்ற அரசுப் பேருந்து இயங்குகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் இப்பேருந்து மூலம் பயணித்து வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்விகூடங்களுக்கு சென்று வருகின்றனர். இப்பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து, மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது. இதனிடையே, வாலாஜாபாத் கல்வி கூடங்களில் பயிலும் மாணவ - மாணவியர் வகுப்பு முடித்து மாலை 4:10 மணிக்கு பிறகே வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகின்றனர். ஆனால், பேருந்து மாலை 4:00 மணிக்குள்ளாகவே வாலாஜாபாத்தை கடந்து விடுகிறது.இதனால், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேரி, சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ - மாணவியர் அப்பேருந்து மூலம் பயணித்து வீடு திரும்ப இயலாத நிலை உள்ளது. மேலும், இப்பேருந்தை தவறவிட்டால் அரும்புலியூர் சுற்று வட்டாரப் பகுதிக்கு மாலை 6:10 மணிக்கு தான் அடுத்தபேருந்து. எனவே, வாலாஜாபாத்திற்கு மாலை 4:20 மணிக்கு வந்தடையும் வகையில் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை