உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறுகிய கிராம சாலைகளால் அவதி

குறுகிய கிராம சாலைகளால் அவதி

வாலாஜாபாத்:தொள்ளாழி, உள்ளாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குறுகியதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் ரயில்வே கேட் துவங்கி, தொள்ளாழி வழியாக, வாரணவாசி சென்றடையும் 9 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.உள்ளாவூர், வரதாபுரம், தொள்ளாழி, தோண்டாங்குளம், ஆம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் இச்சாலை வழியை பயன்படுத்தி சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வாரணவாசி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கும் இச்சாலை வழியாக வேன் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.மேலும், இக்கிராமபுறங்கள் விவசாயம் நிறைந்த பகுதிகளாக உள்ளதால் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களும் அவ்வப்போது இயங்குகின்றன.இச்சாலையில் தொள்ளாழி முதல், வாரணவாசி வரையிலான சாலை மிகவும் குறுகியதாக காணப்படுகிறது.இதனால், இச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.இதுகுறித்து, தொள்ளாழி கிராம மக்கள் கூறியதாவது:வாரணவாசி முதல், உள்ளாவூர் வரையிலான சாலை குறுகியதாக உள்ளதால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, வாரணவாசியில் இருந்து, உள்ளாவூர் கேட் வரையிலான சாலையை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி