உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் காஞ்சிபுரத்தில் ஆலோசனை கூட்டம்

கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் காஞ்சிபுரத்தில் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்:கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகையை, 2016ல் ரத்து செய்யப்பட்டது. மேலும், வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து, 2016ம் ஆண்டுக்கு முன்பிருந்த வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என, கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும், ஆந்திரா, கர்நாடகா அரசுகளை போல, இனாம் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, இனாம் இடங்களில் வாழ்வோருக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி ஏப்., 8ம் தேதி, கோட்டையை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஒருங்கிணைப்பாளர் ஆதிகேசவன் முன்னிலை வகித்தார்.இதில், காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில் மனையில் குடியிருப்போர் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையால் பொருளாதார ரீதியில் சந்திக்கும் பிரச்னை ஆலோசிக்கப்பட்டது.ஏப்., 8ம் தேதி, கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியில், கோவில் மனையில் குடியிருப்போர் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்பது என ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ