உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் டென்னிஸ் அரங்கம் திறப்பு

காஞ்சியில் டென்னிஸ் அரங்கம் திறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சி, கூத்திரமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கபடி உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் காந்தி, மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 29 லட்சம் ரூபாய் செலவில்கட்டப்பட்ட டென்னிஸ் மைதானம், மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சி, கூத்திரமேடு கிராமத்தில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ் 53.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கபடி உள்விளையாட்டு அரங்கத்தை கைத்தறி, துணி நுால் துறை அமைச்சர் காந்தி மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சார் ஆட்சியர் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்க்கொடி குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி