மேலும் செய்திகள்
சிட்டியம்பாக்கம் பாலப்பணியால் கனரக வாகனங்களுக்கு தடை
23 minutes ago
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
27 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த 8 கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தில் பங்கேற்ற 115 பேருக்கு மருத்துவ பரி சோதனை செய்யப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, டிச., மாதத்திற்கான, 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ் நடைபயிற்சி இயக்கம், காஞ்சி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். நடைபயிற்சியில் 115 பேர் பங்கேற்றனர். ஸ்ரீபெரும்புதுார் வட்டார சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தி லுள்ள சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
23 minutes ago
27 minutes ago