புத்தர் கோவிலில் தாய்லாந்து அதிகாரிகள் வழிபாடு
காஞ்சிபுரம்:தாய்லாந்து நாட்டு துாதரக அதிகாரிகள், உபாசகர்கள் ஆறு பேர் காஞ்சி புரம் புத்தர் கோவிலில் வழிபாடு செய்தனர். கோனேரிகுப்பம் ஊராட்சி, வையாவூர் சாலையில் போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவில் உள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள் உபாசகர்கள் என ஆறு பேர் நேற்று வந்தனர். புத்த விகாரின் தலைவர் திருநாவுக்கரசு தலைமையிலா நிர்வாகிகள் கவுதமன், செந்தில்குமார், குமார், தாய்லாந்து துாதரக அதிகாரிகளை வரவேற்றனர்.