உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தை அமாவாசையில் தர்ப்பணம்

தை அமாவாசையில் தர்ப்பணம்

காஞ்சிபுரம் : மாதந்தோறும் வரும் அமாவாசை, முன்னோர்களை வழிபடும் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில், ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மஹாளாய அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.இந்த விசேஷமான அமாவாசை நாட்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக உள்ளது.அதன்படி, தை அமாவாசையான நேற்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் குளக்கரையில், திரளானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.வரிசையில் காத்திருந்து, தேங்காய், பழம், கற்பூரம் ஏற்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், அகத்திக்கீரையை பசுவிற்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ