உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எறையூர் சாலையில் அமைத்த பாலம் இரண்டே ஆண்டுகளில் சேதம்

எறையூர் சாலையில் அமைத்த பாலம் இரண்டே ஆண்டுகளில் சேதம்

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் எறையூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தை சுற்றி வைப்பூர், பேரிஞ்சம்பாக்கம், வளத்தாஞ்சேரி, காரணிதாங்கல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.ஒரடகம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள், தினமும் எறையூர் சாலை வழியே ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர்.நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையில், எறையூர் கிராமத்திற்கு செல்லும் வழியில், எறையூர் - தேவன் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் ஏரியில் இருந்து வெளியேறும் அதிகப்படியான உபரிநீரால், தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்படும்.இதனால், பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, எறையூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை, உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, நபார்டு வங்கி நிதியின் வாயிலாக, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், எறையூர் சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம், 2022ம் ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது.இந்த நிலையில், பாலம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பாலம் பலவீனம் அடைந்து, மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் சாலையில் நீட்டிக் கொண்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். பாலத்தின் மீது நீட்டிக்கொண்டுள்ள இரும்பு கம்பிகளில் சிக்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.இரண்டே ஆண்டுகளில் பாலம் சேதமடைந்துள்ளது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சேதமான பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை