உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரிக்கரை சாலையில் கும்மிருட்டு மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஏரிக்கரை சாலையில் கும்மிருட்டு மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடில் இருந்து, சின்ன காஞ்சிபுரம், சி.வி.ராஜகோபால் தெரு, கே.எம்.அவென்யூ, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர், அல்லாபாத் ஏரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர்.இந்த நிலையில், சாலையோரம் உள்ள ஏரிக்கரைக்கு தடுப்புச்சுவர் இல்லை. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகளும் பழுதடைந்ததால், இரவு நேரத்தில் ஏரிக்கரை சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால், இப்பகுதியில் வசிப்போரும், இச்சாலை வழியாக செல்லும் பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், ஏரிக்கு தடுப்புச்சுவர் இல்லாததால், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையாரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகளும், சாலை வளைவில் வேகமாக வரும் வாகனங்களும் நிலை தடுமாறி ஏரியில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, அல்லாபாத் ஏரிக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெருமின்விளக்குகளை சீரமைக்கவும், ஏரிக்கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்கவும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ