உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அண்ணா நுாற்றாண்டு பூங்கா படுமோசம் குப்பை தொட்டியாக மாறியதால் முகம்சுளிப்பு பெருமை பேசிய தி.மு.க.,வினர் புறக்கணிப்பதாக புகார்

அண்ணா நுாற்றாண்டு பூங்கா படுமோசம் குப்பை தொட்டியாக மாறியதால் முகம்சுளிப்பு பெருமை பேசிய தி.மு.க.,வினர் புறக்கணிப்பதாக புகார்

காஞ்சிபுரம் : முன்னாள் முதல்வர்அண்ணாதுரையின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 2009ல், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, காஞ்சிபுரம் நகருக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். இந்த நிதி வாயிலாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.அதில் ஒன்றாக, பிள்ளை யார்பாளையம் பகுதியில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்கா பற்றி தி.மு.க.,வினர் பெருமை பேசி வந்தனர்.காஞ்சிபுரத்தில் பெரியளவில் நவீன வசதிகளுடன், விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்ட இப்பூங்கா, ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பராமரிப்புடன் இருந்தது. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, இப்பூங்கா மிக மோசமான நிலையில் காணப்பட்டது.காஞ்சிபுரம் நகராட்சியும் அ.தி.மு.க., வசம் இருந்ததால், எந்தவித பராமரிப்பு இன்றி காட்சியளித்தது. காஞ்சிபுரம் நகரவாசிகளின் ஒரே பொழுதுபோக்கு இடமாககாட்சியளிக்கும் இந்த பூங்கா படுமோசமாக உள்ளதை பற்றி நகரவாசிகள் புலம்பி வந்தனர்.இந்நிலையில், 10 ஆண்டு கள் கழித்து, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், அமைச்சர் அன்பரசன், பூங்காவை பார்வையிட்டு, தனது மனக்குமுறலை அங்கேயே தெரிவித்தார். பூங்காவை பராமரிப்பு இன்றி நாசம் செய்துவிட்டதாக புலம்பினார்.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒரு சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முழுமையான பராமரிப்பு பணிகள் செய்யாததால், இன்றைய சூழலில், பூங்கா குப்பை தொட்டி போல் காட்சியளிக்கிறது.தினமும் ஆயிரக்கணக்கானோர், தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கு வருகின்றனர். முதியோர் மற்றும் நடுத்தர வயதினர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இவ்வாறு பலர் பயன்படுத்தும்பூங்காவின் நடைபாதை, கழிப்பறை, மின் பெட்டிகள், விளையாட்டு உப கரணங்கள், இருக்கைகள், அழகு நீரூற்றுகள் என, அனைத்தும் சேதமடைந்துள்ளன.மின் விளக்குகளும் சரிவர எரிவதில்லை. 'சிசிடிவி' கேமரா இல்லாததால் பாதுகாப்பு இன்றி உள்ளது. இதன் காரணமாக, நகரவாசிகள் உள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் இப்பூங்காவை நாசம் செய்துவிட்டதாக கூறும் தி.மு.க., நிர்வாகிகள், இப்போதைய நிலை பற்றி பதில் அளிப்பரா என, நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.மாநகராட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தி.மு.க., மேயர் மகாலட்சுமி, கமிஷனர் என, அனைவரும் பூங்காவை கண்டுகொள்வதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை