உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் மீன், இறைச்சி கழிவுநீர் துர்நாற்றம்

பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் மீன், இறைச்சி கழிவுநீர் துர்நாற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி கட்டடம் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது.இங்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் மீன், மட்டன், சிக்கன் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்கின்றனர். இங்குள்ள கடைகளில், மீன் மற்றும் இறைச்சியை சுத்தப்படுத்தும்போது வீணாகும் கழிவுநீர், பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்படுகிறது.இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரு நாட்களாக ‛மேன்ஹோல்' வழியாக துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீர், மக்கள் நடமாட்டம் மிருந்த சாலையில், 50 மீட்டர் நீளத்திற்கு வழிந்தோடுகிறது.அங்கு கடை வைத்திருப்போர் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மீன் மற்றும் இறைச்சி அங்காடி கழிவுநீர் வெளியேறும் கால்வாயில் உள்ள அடைப்பை நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ