மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
30-Jul-2025
வாலாஜாபாத்,:கீழ்ஒட்டிவாக்கம் மகாமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று விமரிசையாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், கீழ்ஒட்டிவாக்கம் மகாமாரியம்மன் கோவிலில் உள்ள வலம்புரி சக்தி விநாயகர், கங்கையம்மன், அங்காளம்மன் ஆகிய கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு குடம் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அப்போது, விரதம் இருந்த பக்தர்கள், முதுகில் அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஊர்வலத்தின்போது பம்பை, உடுக்கை அடித்து அம்மனை வர்ணித்து பாடல்கள் பாடினர். மதியம் 2:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
30-Jul-2025