உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை

முத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை

பழவேரி:பழவேரியில் முத்து மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா விமரிசையாக நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா, கடந்த 18ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இரண்டு நாட்களாக, கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன், கெங்கையம்மன், சக்தி விநாயகர் ஆகிய கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.நேற்று, காலை 10:00 மணிக்கு, குடம் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது, கெங்கையம்மனுக்கு தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு, கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.இதேபோன்று, பினாயூர் கிராமத்தில் உள்ள சந்தியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத விழா துவங்கியது. காலை 7:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியில் பெண் பக்தர்கள் பங்கேற்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை