உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரத்து கால்வாய்களை சீரமைக்காததால் நிரம்பாத ஏரி நீர்வளத்துறை மீது செவிலிமேடு மக்கள் குற்றச்சாட்டு

வரத்து கால்வாய்களை சீரமைக்காததால் நிரம்பாத ஏரி நீர்வளத்துறை மீது செவிலிமேடு மக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: கனமழை பெய்தும், செவிலிமேடு ஏரி நிரம்ப வில்லை எனவும், நீர் வரத்து கால்வாய்களை நீர்வளத் துறையினர் சரியாக சீரமைக்கவில்லை என, பகுதி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில், 381 ஏரிகள் உள்ளன. 10 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மொத்த ஏரிகளில், 76 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் பெரிய ஏரிகளான உத்திரமேரூர், தாமல் போன்ற ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஆனால், காஞ்சிபுரம் நகரை ஒட்டியுள்ள செவிலிமேடு ஏரி முழுமையாக நிரம்பவில்லை எனவும், ஏரியின் வரத்து கால்வாய்களை நீர்வளத் துறையினர் சரியாக சீரமைக்கவில்லை எனவும், பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செவிலிமேடு ஏரிக்கு, அனைத்து திசைகளிலும் வரத்து கால்வாய்கள் உள்ளன. இதில், கீழம்பி செல்லும் புறவழிச்சாலை அருகில் இருந்து வரும் வரத்து கால்வாய் சீரமைக்கப்படாமலும், மேடான பகுதியாக உள்ளதால், தண்ணீர் வர முடியாமல் இருப்பதாக செவிலிமேடு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். செவிலிமேடு ஏரி நிரம்பினால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் தட்டுப்பாடு இன்றி இருக்கும் என்கின்றனர். மாவட்டத்தின் பல ஏரிகள் நிரம்பும் சூழலில், நகருக்கு அருகில் உள்ள செவிலிமேடு ஏரி முழுமையாக நிரம்பாமல் இருப்பதை பகுதி மக்கள் சுட்டி காட்டுகின்றனர். நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை