உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புல் வளர்ந்துள்ள வெள்ளகுளம் துார்வாரி சீரமைக்க வேண்டும்

புல் வளர்ந்துள்ள வெள்ளகுளம் துார்வாரி சீரமைக்க வேண்டும்

காஞ்சிபுரம்:கோரைப்புல் வளர்ந்துள்ள காஞ்சிபுரம் வெள்ளகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது. காஞ்சிபுரம் வெள்ளகுளம் தெருவில் சந்திரேஸ்வரர் கோவில் பின்புறம் வெண்தாமரை தீர்த்தம், சந்திர தீர்த்தம் என, அழைக்கப்படும் வெள்ளகுளம் உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தில் கோரைப்புல் வளர்ந்து குளத்தின் நீர் பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்துள்ளது. மேலும், குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் கலந்ததால், குளத்து நீர் மாசடைந்துள்ளது. எனவே, வெள்ள குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை