காட்சி பொருளான குடிநீர் தொட்டி ஒரத்துார் பகுதிவாசிகள் அவதி
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்துார் ஊராட்சி, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, பஜனை கோவில் தெருக்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்காக விநாயகர் கோவில் தெருவில், சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது.தொட்டியில் தண்ணீர் ஏற்றி, வீட்டு உபயோக தேவைக்கு அப்பகுதி வாசிகள் உபயோகித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக மின்மோட்டார் பழுது காரணமாக தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாத சூழல் உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்களின் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. எனவே, பழுதான மின் மோட்டாரை சரிசெய்து, சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.