மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி ..
11-Jan-2025
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
10-Jan-2025
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே நரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், முதலாம் ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது.காலை 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, ஸ்ரீனிவாச பெருமாள், பூதேவிக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிககு சிறப்பு பூஜை, 10:00 மணிக்கு கோமாதா பூஜை நடந்தது.அதை தொடர்ந்து, மாலை 7:00 மணிக்கு, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில், நரியம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு 10:00 மணிக்கு, சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெருவீதி உலா நடைபெற்றது. அதற்கான ஏற்படுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
11-Jan-2025
10-Jan-2025