உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கிருஷ்ணசாமி நகரில் குடிநீருக்கு தட்டுப்பாடு

காஞ்சி கிருஷ்ணசாமி நகரில் குடிநீருக்கு தட்டுப்பாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 25வது வார்டு, கிருஷ்ணசாமி நகரில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் துணி துவைக்கவும், குளிக்கவும் அங்குள்ள, குடிநீர் தொட்டி வாயிலாக வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், குடிக்கவும், சமையல் செய்யவும், மாநகராட்சி அமைத்துள்ள 7 தெரு குழாய்களில் வரும் குடிநீரை அப்பகுதியினர் பயன்படுத்துகின்றனர்.குடிப்பதற்காக மாநகராட்சி வழங்கும் குடிநீர் குறைவான அளவில் வருவதால், பலர் போதுமான அளவு குடிநீர் பிடிக்க முடியாத சூழல் உள்ளது. குழாயில் குறைவான அளவு தண்ணீர் வருவதால், வீட்டு தேவைக்கு பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து இப்பகுதிவாசிகள் கூறியதாவது:எங்கள் பகுதியில் உள்ள பலரது வீடுகளில், தனித்தனியாக வீட்டு குடிநீர் இணைப்பு இல்லை. மாநகராட்சிக்கு டெபாசிட் செய்து, பிளம்பிங் கூலி மற்றும் பிறவற்றிற்கு என ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து குழாய் இணைப்பு பெற முடியவில்லை.எனவே, தெரு குழாயை மட்டுமே நம்பியுள்ளோம். ஆனால், தெரு குழாயிலும் தண்ணீர் குறைவான அழுத்தத்தில் வருவதால், யார் முதலில் பிடிப்பது என்பதில், அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. போதிய அளவில் குடிநீர் வந்தால், பிரச்னை இருக்காது. மாநகராட்சி நிர்வாகம், முறையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:கிருஷ்ணசாமி நகரில், 1994ம் ஆண்டு அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது அப்பகுதியில் வீடுகள் அதிகரித்துள்ளதால், குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஒரு மாதத்தில் பழைய குழாய்கள் அகற்றப்பட்டு, புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ