புள்ளலுாரில் நாளை தீமிதி திருவிழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் திரவுபதியம்மன் கோவிலில், மே- 1ம் தேதி மஹாபாரத சொற்பொழிவு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.கடந்த 11ம் தேதி அர்ச்சுனன் தவமிருந்து, பாசுபதாஸ்திரத்தை பெற்றார். அதை தொடர்ந்து, 15ம் தேதி பாரதப்போர் போர் துவங்கியது. நேற்று அபிமன்யூ வதம் செய்யப்பட்டார்.இன்று இரவு, கர்ணன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை காலை துரியோதன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணி அளவில் தீமிதி திருவிழா மற்றும் நாளை மறுநாள் தர்மர் பட்டாபிஷேக விழாவுடன் மகாபாரத நிகழ்வு நிறைவு பெற உள்ளது.