உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் திருக்கல்யாண உற்சவம்

கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், வருடாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா வரும் 27ம் தேதி, காலை 8:00 மணிக்கு கோபூஜையுடன் துவங்குகிறது.அதை தொடர்ந்து சங்காபிஷேகமும், 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, யாகசாலை பூஜை, யாக வேள்வியும், காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, வருடாபிஷேகம் , மஹா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட உள்ளது.மாலை 6:00 மணிக்கு அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண மஹோற்சவமும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை