உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெங்கடேச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

வெங்கடேச பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

திருமுக்கூடல்:திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், மகாளய அமாவாசையையொட்டி உற்சவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியான திருமுக்கூடல் பாலாற்றங்கரையில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், நடப்பாண்டிற்கான புரட்டாசி அமாவாசையையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அப்பன் வெங்கடேச பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மதியம் 1:00 மணிக்கு சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலுக்குள் சுவாமி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை