உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதுவிற்ற மூவர் கைது

மதுவிற்ற மூவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, சட்ட விரோதமாக மது பாட்டிகளை பதுக்கி விற்பனை செய்த, மூன்று பேரை ஒரகடம் போலீசார் இன்று (நவ.,28) கைது செய்தனர். ஒரகடம் அருகே, வாரணவாசி பகுதியில் மது பாட்டிகளை பதுக்கி, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக, ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று காலை வாரணவாசி பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மது பாட்டிகளை பதுக்கி, விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சரத், 20, இந்திரன் நாகன், 44, அகரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 42, ஆகிய மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்து, அவர்களிமிருந்து 53 மது பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ