மேலும் செய்திகள்
இன்றைய கஞ்சா பறிமுதல்
14-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியில் உள்ள சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து, 'டாடா ஹெக்சா' கார் ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரிந்தது.காரில் இருந்து கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 149 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 1.33 லட்ச ரூபாயாகும்.காரில் இருந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாந்திலால், 40, மற்றும் ஹதாமத் சிங்,42. ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கார் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல, காஞ்சிபுரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக, பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த லோகா, 26, என்பவரை, சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, கஞ்சா, போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
14-Nov-2024