உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவண்ணாமலை கிரிவலக்குழு ஆண்டு விழா

திருவண்ணாமலை கிரிவலக்குழு ஆண்டு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றத்தின், 27வது ஆண்டு விழா சித்தீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது. விழாவையொட்டி, முத்தீஸ்வரர் கோவிலில் இருந்து சிவநாத முழக்கத்துடன் சிவகாமி சமேத நடராஜ பெருமான், மாணிக்கவாசகர் சுவாமிகளுடன் சித்தீஸ்வரர் கோவில் வரை வீதியுலாவும், தொடர்ந்து மாகேஸ்வர பூஜையும், திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் நடந்தது.புதுச்சேரி மணலிபட்டு, சுத்தாத்துவித சைவத்திருமட குருமுதல்வர் வாமதேவ சிவ குமாரசாமி தேசிகபரமசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். திருவண்ணாமலை கிரிவல குழு நிறுவன செயலர் கங்காதரன் ஆண்டறிக்கை வாசித்தார். இதில், திரளான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ