இன்று இனிதாக ... (25.09.2025) காஞ்சிபுரம்
ஆன்மிகம் வார்ஷீக மஹோத்சவம் துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நட்சத்திர வார்ஷீக மஹோத்சவம், தங்கபல்லக்கு, முரளி கிருஷ்ணன் திருக்கோலம், வேதாந்த தேசிகர் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; சந்திர பிரபை, இரவு 7:00 மணி. நவராத்திரி விழா விசேஷ அபிஷேக அலங்காரம், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; சூரசம்ஹாரம், இரவு 7:00 மணி; தாமரசேரி ஈஸ்வரன் பட்டாத்ரி குழுவினர், வாய்பாட்டு இரவு 7:30 மணி. மஹா சதசண்டி ஹோமம், சாந்தி துர்கா மூல மந்திரம், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; டாக்டர் கோகிலவாணி மற்றும் மாணவியர் பரதநாட்டியம், இரவு 7:00 மணி. லட்சுமி நாராயணன் அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி. சிறப்பு மலர் அலங்காரம், மகா தீப்பாஞ்சியம்மன் கோவில், வ.ஊ.சி., தெரு, பல்லவர்மேடு கிழக்கு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. மூலவருக்கு தான்ய அலங்காரம், உற்சவருக்கு அன்னபூரணி அலங்காரம், பொன்னி அம்மன் கோவில், பெரியநத்தம் கிராமம், வாலாஜாபாத், மாலை 6:00 மணி. புற்று மாரியம்மன் அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், 47 வது வார்டு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி, இரவு 7:00 மணி. ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கும், துர்கையம்மனுக்கும் நவராத்திரி சிறப்பு அபிஷேக அலங்காரம், வரசித்தி விநாயகர் கோவில், வரதராஜபுரம் தெரு, அல்லாபாத் ஏரிக்கரை, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி. சொற்பொழிவு தலைப்பு: கம்பர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி. பாலாபிஷேகம் தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி. குருவார சிறப்பு அபிஷேகம் சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி. குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி. பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி மற்றும் மாலை 5:15 மணி. அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி. ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.