உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரிய காஞ்சி தர்காவில் நாளை சந்தனகுட உற்சவம்

பெரிய காஞ்சி தர்காவில் நாளை சந்தனகுட உற்சவம்

காஞ்சிபுரம்,:பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஹஜரத் சையத் ஷா ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சந்தனகுட உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருச்சந்தனக்குட உருஸ் உற்சவம் நேற்று முன்தினம் இரவு, மக்ரிப் தொழுகைக்கு பின், கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று மாலை 6:30 மணிக்கு திருக்குரான் ஓதப்பட்டது. இன்று இரவு 7:00 மணிக்கு அரபி மவுலுது மற்றும் உருது கஸிதா நடைபெறுகிறது. நாளை இரவு 11:00 மணிக்கு திருச்சந்தனகுட உருஸ் உற்சவமும், 21ம் தேதி உருஸ் எனப்படும் கவ்வாலியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ