உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் போக்குவரத்து மாற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு எஸ்.பி.,யிடம் புகார் மனு

காஞ்சியில் போக்குவரத்து மாற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு எஸ்.பி.,யிடம் புகார் மனு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பட்டு சேலை வாங்கவும், கோவில்களில் தரிசனம் செய்யவும் ஏராளமான வெளியூர்வாசிகள், காஞ்சிபுரத்திற்கு அன்றாடம் வந்து செல்கின்றனர். வெளியூர்வாசிகள் கொண்டு வரும வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், நெரிசல் ஏற்படுகிறது.எனவே, காஞ்சிபுரம் காந்தி சாலையில் இரு புறங்களிலும் கார், இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருபுறங்களிலும் இலகுரக வாகனங்கள், கடைகளுக்கு செல்ல வழிவகை செய்யப்ப்பட்டுள்ள நிலையில், காந்திரோட்டின் நடுவே, பேருந்து, கார், இருசக்கர வாகனம் ரங்கசாமி குளம் நோக்கி நேராக நெரிசலின்றி ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.இந்த புதிய நடைமுறை வியாபாரத்தை பாதிப்பதாக, காஞ்சிபுரம் காந்தி சாலை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:காந்தி சாலையில் பல ஆண்டுகளாக பட்டு சேலை வியாபாரத்தை நம்பி ஆயிரக்கணக்கான வணிகர்கள், நெசவாளர்கள், பலதரப்பு வியாபார மக்கள் வந்து செல்கின்றனர்.காந்தி சாலையில், கடைகளின் வாசலுக்கு 5 அடி விட்டு, சாலையின் இரு பக்கமும் தடுப்பு அமைத்து வாகனங்கள் வந்து செல்ல வழி செய்துள்ளனர்.இதனால், வாடிக்கையாளர்கள் மற்றும் பாதசாரிகள் சென்று வர மிகவும் சிரமப்படுகிறார்கள். வியாபாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.இதனால், சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கிறது. இந்த மாற்றத்தை நீக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை