உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அதிக எடையில் விளைந்த கேரட் வியாபாரிகள் வாங்க மறுப்பு

அதிக எடையில் விளைந்த கேரட் வியாபாரிகள் வாங்க மறுப்பு

தேன்கனிக்கோட்டை:சாகுபடி செய்திருந்த கேரட் அதிக எடையுடன் இருந்ததால், அதை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. அதனால், கேரட் விளைந்த தோட்டத்தை விவசாயி, டிராக்டர் ஓட்டி அழித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த காடு உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 39; விவசாயி. இவர் தன், 2 ஏக்கர் நிலத்தில் கேரட் சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயாரான நிலையில், அதை வாங்க கர்நாடகா, உள்ளூர் வியாபாரிகள் என மொத்தம், 10க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால், வழக்கத்திற்கு மாறாக கேரட் அதிக பருமன், எடையுடன் விளைந்திருந்ததால், சந்தையில் மக்களிடம் விற்பனையாகாது எனக்கூறி கொள்முதல் செய்ய மறுத்துள்ளனர். கேரட் சாகுபடிக்கு, 2 ஏக்கருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருந்த விவசாயி சிவக்குமார், கேரட் விற்காத நிலையில் கடந்த, 3 நாட்களாக மக்கள் பிடுங்கி செல்லவும், கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கும் விட்டிருந்தார். அதன்பின் நேற்று முன்தினம் கேரட் தோட்டத்தை, டிராக்டர் ஓட்டி அழித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ