பாரம்பரிய உலக விழாக்கள் புகைப்பட கண்காட்சி நிறைவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கருடசேவை விழாவை ஐ.நா., மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பில் சேர்க்க வலியுறுத்தி, காஞ்சிபுரம் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில், பாரம்பரிய உலக விழாக்கள் குறித்த புகைப்பட கண்காட்சி காஞ்சிபுரத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது.கண்காட்சியில், காஞ்சிபுரம் வரதர் கோவிலில் பழங்கால படங்கள், காஞ்சி வரதர் கருடசேவை விழா குறித்து தியாகராஜர், பூதத்தாழ்வார் கூறிய குறிப்புகளும் இடம் பெற்றிருந்தது. ஆறு நாட்களாக நடந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், 7,400க்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.வரதர் கோவில் பிரம்மோத்சவத்தை காண வந்த பக்தர்கள் மட்டுமின்றி வராலாறு ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர், பள்ளி கல்லுாரி மாணவர்கள், வெளிநாட்டு சுற்றுலாkf பயணியரும் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.கண்காட்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்த ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மைய நிறுவனர் பேராசிரியர் அண்ணாதுரை தெரிவித்தார்.