மேலும் செய்திகள்
பூக்கடை சத்திரத்தில் போக்குவரத்து நெரிசல்
25-May-2025
ஸ்ரீபெரும்புதுார்:வாலாஜாபாத், கீழச்சேரி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் சாலைகள் சந்திக்கும் இடத்தில், சுங்குவார்சத்திரம் அமைந்துள்ளது. இங்கு, தனியார் மருத்துமனை, வங்கிகள், பூக்கடை உள்ளிட்ட வணிக கடைகள் என, 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் பல்வேறு தேவைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், தங்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்து அதிகம் உள்ள சுங்குவார்சத்திரம் நான்கு சாலைகளிலும் நிறுத்துகின்றனர்.இதனால், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பேருந்து, கனரக வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த, சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
25-May-2025