உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் தம்மனுாரில் வாகன ஓட்டிகள் அவதி

தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் தம்மனுாரில் வாகன ஓட்டிகள் அவதி

வாலாஜாபாத்:தம்மனுாரில் இயங்கும் தனியார் கல் குவாரியில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், சாலைகளில் மண் பரவி வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். வாலாஜாபாத் தாலுகா, தம்மனுார் மற்றும் நெய்க்குப்பம் இடையில், சில மாதங்களுக்கு முன், கல் குவாரி துவக்கப்பட்டது. இந்த கல் குவாரியில் பாறைகளை உடைத்தெடுக்கும் பணியும், மண் தோண்டி எடுக்கும் பணியும் நடை பெறுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் மண், அவளூர் பாலாற்று பாலம் மற்றும் வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. பெரும்பாலான லாரிகள் அதிக பாரம் ஏற்றி, தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுகின்றன. இதனால், சாலைகளில் மண் புழுதி பரவி வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்ப்பதோடு, சாலையில் நடந்து செல்வோரும் அவதிப்படுகின்றனர். எனவே, குவாரியில் இருந்து, மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில், அளவாக மண் ஏற்றுவதோடு, முறையாக தார்ப்பாய் மூடி இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி