உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், தார்ப்பாய் மூடாமல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உத்திரமேரூரில், பிரதான சாலைகளில் தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. ஜல்லி, எம்.சாண்ட், மணல் ஆகியவை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அதிகளவில் செல்கின்றன. அவ்வாறு செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் வேகமாக செல்லும்போது ஜல்லி, மணல் ஆகியவை சாலையில் சிதறுகின்றன. அப்போது, வாகனங்களில் செல்வோர் நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தார்ப்பாய் மூடாமல், அதிக பாரம் ஏற்றிச் செல்லும், வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி