உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொடர் கண்காணிப்பு சிகிச்சையால் குறைந்து வரும் காசநோய் பாதிப்பு

தொடர் கண்காணிப்பு சிகிச்சையால் குறைந்து வரும் காசநோய் பாதிப்பு

காஞ்சிபுரம்:தொடர் கண்காணிப்பு சிகிச்சை அளிப்பதால், காசநோய் பாதிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என, காசநோய் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நோய் முற்றிலும் ஒழிக்க, தயக்கம் இன்றி பரிசோதனை மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில், காசநோய் பிரிவு இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. மைக்கோ பாக்டீரியம் என்கிற நுண் கிருமியினால், காசநோய் ஏற்படுகிறது. இந்நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது. இரண்டு வாரங்களுக்கு மேலாக, சளியுடன்கூடிய இருமல் வருவது; இரவு நேரங்களில் அதிகமாக வியர்வை வருவது; மாலை நேரங்களில் காய்ச்சல்; திடீரென உடல் எடை குறைதல்; சளியில் ரத்தம் வருதல்; நெஞ்சுவலி நோய்களின் அறிகுறி யே காசநோயாகும் . இந்த நோயை, அதிநவீன கருவிகளின் உதவியுடன் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்-ரே மூலம் துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர, காசநோயாளிகளுடன் வசிப்பவர்கள்; எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள்; புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள்; டயாலிசிஸ் என, அழைக்கப்படும் சிறுநீரக செயலிழப்பு. மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள்; சர்க்கரை உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள்; ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்; எடை குறைவான நபர்கள் ஆகியோர் தாமாக முன் வந்து காசநோய் பரிசோதனை செய்துக் கொள்ளலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள், ஆறு மாத காலத்திற்கு சிகிச்சை பெற்று வந்தால், குணமடையலாம். மேலும், சிகிச்சை காலங்களில் ஊட்டசத்து உணவு உட்கொள்வதற்கு, 1,000 ரூபாய் மா தந்தோறும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. காசநோய் கண்டறிவதற்கு, நடமாடும் எக்ஸ்--ரே என அழைக்கப்படும் ஊடுகதிர் வாகனத்தின் மூலமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு திட்ட சிறப்பு முகாம் நடக்கும் இடங்கள் மற்றும் அதிக மக்கள் கூடுமிடங்களுக்கு வரும் நபர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்--ரே செய்யப்படுகின்ற ன. கடந்த 2024ம் ஆண்டு, 1 லட்சத்து, 4,850 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 4,815 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில், 57,159 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2,857 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆண்டு தோறும், கணிசமான எண்ணிக்கை பேருக்கு, காசநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. நோய் தொற்று இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் காளீஸ்வரி கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், சத்து குறைபாடு உள்ளோர், மாலை நேர காய்ச்சல், தொடர் இருமல், எடை குறைதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் காசநோ யாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் தயக்கம் இன்றி, சளி பரிசோதனை, எக்ஸ்-ரே ஆகிய பரிசோதனை மூலம் காசநோயை கண்டறியலாம். நோய் உறுதியானால், ஆறு மாதம் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை எடுத்தால், முற்றிலும் குணமாக்கலாம். அதிக பாதிப்பு இருப்போர், தாம்பரம் சானடோரியத்தில், 700 படுக்கை கொ ண்ட தனி அரசு மருத்துவமனை உள்ளது. உள்நோயாளிகள் அங்கு சிகிச்சை எடுக்கலாம். மேலும், சத்தான ஊட்டசத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வா று அவர் கூறினார். 'உ ங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின்' முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு முகாம்களில், நடமாடும் வாகனங்களின் மூலமாக எக்ஸ்--ரே எடுக்கிறோம். இரு ஆண்டுகளில், 150 பேருக்கு காசநோய் இருந்ததை எக்ஸ்--ரே மூலமாக கண்டுபிடித்துள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பயன்பெறலாம். 'உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின்' முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு முகாம்களில், நடமாடும் வாகனங்களின் மூலமாக எக்ஸ்--ரே எடுக்கிறோம். இரு ஆண்டுகளில், 150 பேருக்கு காசநோய் இருந்ததை எக்ஸ்--ரே மூலமாக கண்டுபிடித்துள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பயன்பெறலாம். ' உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின்' முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு முகாம்களில், நடமாடும் வாகனங்களின் மூலமாக எக்ஸ்--ரே எடுக்கிறோம். இரு ஆண்டுகளில், 150 பேருக்கு காசநோய் இருந்ததை எக்ஸ்--ரே மூலமாக கண்டுபிடித்துள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ