உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்ற இருவர் கைது 

குட்கா விற்ற இருவர் கைது 

காஞ்சிபுரம்: குட்கா பொருட்களை விற்ற இருவரை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரனேரி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஆரனேரி கிராமத்தில் குட்கா பரிசோதனை செய்தனர். அப்போது, ஒடிஷா மாநிலம், நாச்சிபுரிய பைசிங்க் பகுதியைச் சேர்ந்த ஜெயதேப் நாயக்,40, ஒடிஷா மாநிலம், ராம்பிலா பார்த்ரக் அரவிந்தா ஜெனா, 32. ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ