லாரி மீது பைக் மோதி இருவர் பலி
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 21; பைக் மெக்கானிக். இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், 22, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, கே.டி.எம்., பைக்கில், ஒரகடத்தில் இருந்து திருக்கச்சூர் நோக்கி சென்றார். அப்போது, அதே மார்க்கமாக சென்ற கன்டெய்னர் லாரி, வடக்குப்பட்டு அருகே 'சிக்னல்' போடாமலே திடீரென திரும்பியதால், பைக் லாரி மீது மோதியது. இதில், சந்தோஷ், கலைச்செல்வன் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரகடம் போலீசார், உடல்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.