மேலும் செய்திகள்
கொலை முயற்சி வழக்கு இருவருக்கு குண்டாஸ்
03-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி, ரவுடி வசூல் ராஜா, 34, என்பவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரவுடி தியாகுவை போலீசார் தேடி வருகின்றனர்.இவ்வழக்கில், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் கைது செய்யப்பட்டிருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில், கைது செய்யப்பட்ட 11 பேரில், வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன் என்கிற பரத், 20, மற்றும் சிவா, 19, ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில், நான்கு நாட்கள் முன்பாக போலீசார் கைது செய்தனர்.இதே வழக்கில், கைது செய்யப்பட்ட திருக்காலிமேட்டைச் சேர்ந்த சுரேஷ், 19. மற்றும் ஜாகீர்உசேன், 25, ஆகிய இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி.,சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அவரது பரிந்துரையை ஏற்ற காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, சிறையில் உள்ள இருவரிடமும் போலீசார் வழங்கினர்.
03-Apr-2025