உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / லாரி மீது பைக் மோதல் இரு வாலிபர்கள் பலி

லாரி மீது பைக் மோதல் இரு வாலிபர்கள் பலி

காஞ்சிபுரம்: கன்டெய்னர் லாரி மீது, பைக் மோதிய விபத்தில், இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், 21; பைக் மெக்கானிக். இவர், தன் நண்பரான, விழுப்புரம் அடுத்த பெருங்கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், 22, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு, 'கே.டி.எம்.,' பைக்கில், ஒரகடத்தில் இருந்து, திருக்கச்சூர் நோக்கி சென்றார். அப்போது, அதே மார்க்கமாக சென்ற கன்டெய்னர் லாரி, வடக்குப்பட்டு அருகே சிக்னல் செய்யாமல் திரும்பியதால், பைக்கில் சென்ற இருவரும் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இதில், சந்தோஷ், கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ