உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உரிமை கோரப்படாத நிதி: காஞ்சியில் மீட்பு முகாம்

உரிமை கோரப்படாத நிதி: காஞ்சியில் மீட்பு முகாம்

காஞ்சிபுரம்: வங்கிகளில் உரிமை கோரப்படாத நிதி, சொத்துக்கள் மீட்பு முகாம், காஞ்சிபுரத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் தொடர்பான உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இந்த முகாம், அனைத்து வங்கிகளிலும் டிசம்பர் மாதம் இறுதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது. இம்முகாம், நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும், தங்களுக்கான உரிமை தொகையை கோரி பெறலாம் என இம்முகாமில், கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோரப்படாமல் இருந்த வைப்புத்தொகை 9.4 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்வில், இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் லீலா, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர்கள் பேரரசு, நடராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திலீப், மகளிர் திட்ட இயக்குநர் பிச்சாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !