உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வர்ணம் பூசாத வேகத்தடை செம்பரம்பாக்கத்தினர் அவதி

வர்ணம் பூசாத வேகத்தடை செம்பரம்பாக்கத்தினர் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் இருந்து, புதுப்பாக்கம், பெரியகரும்பூர், செம்பரம்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக, கூரம் கேட் வரையில் 6 கி.மீ., துாரம், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், சாலை உள்ளது.இந்த சாலை, கடந்த ஆண்டு தார் சாலையாக போட்டனர். சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், சாலையின் இரு புறமும் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.மேலும், பெரியகரும்பூர் இருளர் குடியிருப்பு மற்றும் செம்பரம்பாக்கம், கூரம் கேட் ஆகிய பகுதிகளில் போடப்பட்ட வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதுதவிர, சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லை.எனவே, கூரம் கேட் - செம்பரம்பாக்கம் - பெரிய கரும்பூர் இடையே இருக்கும் வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை