வர்ணம் பூசாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அச்சம்
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, வேடல் கிராமம் வழியாக, கூத்திரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.இச்சாலை வழியாக கூத்திரம்பாக்கம், தொடூர், நீர்வள்ளூர் ஆகிய பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தோர், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், காஞ்சிபுரத்திக்கு சென்று வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு முன் புதிய தார் சாலையாக செப்பணிடப்பட்டது. ஆனால், சாலையின் இருபுறமும் எச்சரிக்கை பலகை அமைக்கவில்லை.வேடல் கிராமத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு, வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடை மீது, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வர்ணம் பூசவில்லை. மேலும், எச்சரிக்கை சாதனங்கள் பொருத்தவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, வேடல் கிராம சாலையில் உள்ள வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.