உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்

தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்

வாலாஜாபாத்,:குதிரைக்கால் மடுவு தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் இருந்து, சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், பிரதான ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலை, சில மாதங்களுக்கு முன் தார் சாலையாக அமைக்கப்பட்டது. இருப்பினும், சாலை குறுக்கே செல்லும் குதிரைக்கால் மடுவு கால்வாய் தரைப்பாலத்தின் ஓரம் தடுப்பு எதுவும் அமைக்கவில்லை. மேலும், அந்த சாலையில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்வோர், தரைப்பாலக் கால்வாயில் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். எனவே, வையாவூர்- - சிட்டியம்பாக்கம் இடையே செல்லும் குதிரைக்கால் மடுவு தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'குதிரைக்கால் மடுவில், தடுப்பு வசதியுடன்கூடிய புதிய உயர் மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும். அது, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை