உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அல்லாபாத் ஏரிக்கரையோரம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

அல்லாபாத் ஏரிக்கரையோரம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு சின்னவேப்பங்குளத்தில் இருந்து, நேதாஜி நகர் வழியாக, சின்ன காஞ்சிபுரம், சி.வி.ராஜகோபால் தெருவிற்கு செல்லும் வழியில் அல்லாபாத் ஏரி உள்ளது.சாலையோரம் உள்ள இந்த ஏரி, 20 அடி ஆழம் கொண்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரிக்குள், செடி, கொடிகள் மண்டியுள்ளதோடு சீமை கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன.இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி, தொண்டு நிறுவனம் சார்பில், அல்லாபாத் ஏரிக்கரை துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏரிக்கரையோரம் உள்ள முட்செடிகள் அகற்றப்பட்டுள்ளதால், தற்போது ஏரி ஆழமாக காட்சியளிக்கிறது.சாலையோம் ஏரிக்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, ஏரியில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.அதேபோல, இரவு நேரத்தில் மின்தடையின்போது ஏரிக்கரையோரம் செல்லும் வாகன ஓட்டிகளும் ஏரியில் நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், அல்லாபாத் ஏரிக்கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை