மேலும் செய்திகள்
தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை
13-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவனை, காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில், பேரூராட்சியின் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் இல்லாமல் உள்ளது. பேரூராட்சியின் முக்கிய இடங்களில், மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க, இதுவரை தண்ணீர் பந்தல்கள் இல்லாமல் உள்ளன.எனவே, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தண்ணீர் பந்தல்கள் திறக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Mar-2025