உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு இரட்டை கால்வாய் துார்வாரும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகரில் இருந்து அதியமான் நகர், எம்.ஜிஆர்., நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர் வழியாக, தேனம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில், இரட்டை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் வட கிழக்கு பருவமழை துவங்கும்முன், இக்கால்வாய் துார்வாரி சீரமைக்கப்படும். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இரட்டை கால்வாய் துார்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. தற்போது, செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகர் அருகில் கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் யோரம் அமைந்துள்ள பகுதியில் மழைநீர் புகும் நிலை உள்ளது. எனவே, இரட்டை கால்வாய் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி