உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சரிந்து கிடக்கும் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

சரிந்து கிடக்கும் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்,உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, திருப்புலிவனம், சின்ன அழிசூர் வழியே, கலியாம்பூண்டி செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.இந்நிலையில், சின்ன அழிசூர் பகுதியில் உள்ள சாலை, சேதமடைந்து சரிந்துள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சரிந்து கிடக்கும் சாலையில் சிக்கி, கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.மேலும், இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல சிரமப்படுகின்றனர்.வாகன ஓட்டி கள், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சரிந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை