சேதமான வடிகால்வாய் தளம் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், அரசமர தெருவில், சாலையோரம், 'கான்கிரீட்' தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக கனரக வாகனம் சென்றபோது, கால்வாய் தளத்தில் விரிசல் ஏற்பட்டது.நாளடைவில் தளம் உடைந்து கால்வாயில் விழுந்து விட்டது. கால்வாய் திறந்து கிடப்பதால், சாலையில் பறக்கும் குப்பை விழுந்து, கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைகாலங்களில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அரசமர தெருவில், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.