உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

உத்திரமேரூர் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

உத்திரமேரூர், செப். 2– உத்திரமேரூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக கேசவன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். உத்திரமேரூர் உட்கோட்டத்தில், சாலவாக்கம், பெருநகர், உத்திரமேரூர், மாகறல் மற்றும் வாலாஜாபாத் ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் உள்ளன. உத்திரமேரூர் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன். கடந்த ஜூலை 2ம் தேதி திண்டிவனத்திற்கு டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்பட்டார். அதை தொடர்ந்து, உத்திரமேரூர் உட்கோட்டத்திற்கு பொறுப்பு டி.எஸ்.பி.,யாக அருள்மணி பணியாற்றி வந்தார். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 1 தேர்வில் தேர்ச்சி பெற்று தருமபுரியில், 13வது பேட்ச்யில் டி.எஸ்.பி.யாக பயிற்சி பெற்று வந்த கேசவன், நேற்று காலை, உத்திரமேரூர் உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை